Idhayam Matrimony

பெரியாறு அணையில் தேசிய அணை பாதுகாப்பு ஆணைய குழுவினர் ஆய்வு

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
Mullai-River 2023-08-17

Source: provided

சென்னை : தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு அமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இக்குழுவினர் நேற்று முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர்.

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என 2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், பேபி அணையைப் பலப்படுத்தவிடாமல் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது. 2024 அக். 1-ம் தேதி இந்த அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் முதல் ஆய்வு நேற்று (மார்ச் 22) செய்தனர். ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் தமிழக நீர்வளத் துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் முல்லை பெரியாறு அணை, பிரதான அணை , பேபி அணை, சுரங்க பகுதி, நீர்வழிப்போக்கிகள், மதகுகள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

 இதன் பின்னர், தொடர்ந்து, இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, முல்லை பெரியாறு அணையின் பலம், பராமரிப்பு குறித்தும் விவாதிக்க உள்ளனர். அதையடுத்து, ஆய்வு தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து