முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி., எம்.ஆர்.பி. மூலம் தேர்வான 621 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 4 ஏப்ரல் 2025      தமிழகம்
CM 2024-12-03 (2)

Source: provided

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. மற்றும் எம்.ஆர்.பி. மூலம், பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 621 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பால்வளத் துறை சார்பில் 64, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 166, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 391, என மொத்தம் 621 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்.ஆர்.பி.) தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 13 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஏப்.4) வழங்கினார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 40,000 பணியிடங்கள் நடப்பு நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ளும் என்ற அறிவிப்பிற்கிணங்க, தமிழக முதல்வர் நேற்று 621 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக பால்வளத் துறை: 

பால்வளத் துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிந்திட டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக இளநிலை செயற்பணியாளர் (அலுவலகம்) பணியிடத்திற்கு 29 நபர்கள், பால் அளவையாளர் நிலை-III பணியிடத்திற்கு 11 நபர்கள் மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடத்திற்கு 24 நபர்கள், என மொத்தம் 64 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் நேற்று 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை: 

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவில் பணி ஓய்வின் காரணமாக நிலவும் பணியாளர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கிலும், டி.என்.பி.எஸ்.சி. மூலம் 90 ஆண் பணியாளர்கள் மற்றும் 76 பெண் பணியாளர்கள், என மொத்தம் 166 உதவி விற்பனையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: 

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 74 இ.சி.ஜி. தொழில்நுட்ப வல்லுநர் , 44 இயன்முறை சிகிச்சையாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், டி.என்.பி.எஸ்.சி.யால், 205 இளநிலை உதவியாளர் மற்றும் 68 தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு தமிழக முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து