முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு: 17 எம்.பி.க்களுக்கு விருது

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடில்லி : பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சிறந்த பங்காற்றியவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின்  தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் 16 மற்றும் 17-வது மக்களவையில் சிறந்த பங்காற்றியதற்காக பருத்ஹரி மஹ்தாப் (பிஜு ஜனதா தளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார்), என்.கே.பிரேமச்சந்திரன் (சமூகப் புரட்சிக் கட்சி), ஸ்ரீரங் அப்பா பர்னே (சிவசேனை) ஆகியோர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஸ்மிதா வாக் (பா.ஜ.க.), அரவிந்த் சாவந்த் (சிவசேனை - உத்தவ் தாக்கரே), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவசேனை), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கர்னி (பா.ஜ.க.), பிரவீன் படேல் (பா.ஜ.க.), ரவி கிஷன் (பா.ஜ.க.), நிஷிகாந்த் துபே (பா.ஜ.க.), பித்யூத் பரன் மஹாதோ (பா.ஜ.க.), பி.பி.சௌத்ரி (பா.ஜ.க.), மதன் ராத்தோர் (பா.ஜ.க.), சி.என்.அண்ணாதுரை (தி.மு.க.), திலீப் சைக்கியா (பா.ஜ.க.) ஆகியோருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

மேலும், இரு நிரந்தரக் குழுக்களான நிதி மற்றும் விவசாயத் துறைகளுக்கும் சிறந்த செயல்திறனுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து