முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.38 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      தமிழகம்
Havala 2025-05-18

Source: provided

சென்னை : ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை வழியாக செங்கல்பட்டு செல்லும் சர்க்கார் விரைவு ரயிலில் ரூ.38 லட்சம் ஹவாலா பணத்தை கடத்திய இளைஞரை எழும்பூர் ஆர்.பி.எப் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடம் ஆர்.பி.எப் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஆர்.பி.எப் காவல் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டின் தலைமையில் ஆர்.பி.எப். போலீஸார் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, எழும்பூர் ரயில் நிலையத்தின் 8-வது நடைமேடைக்கு சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் வந்து இறங்கிய இளைஞர், சந்தேகிக்கும் வகையில் இருந்ததால் அவரை ஆர்.பி.எப். போலீஸார் பிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில், ஆவணம் ஏதுமின்றி கட்டு கட்டாக பணம் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதைடுத்து, அவரை எழும்பூர் ஆர்.பி.எப். அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அந்த நபர் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சிராலா பகுதியைச் சேர்ந்த நரேஷ் (33) என்பதும், சென்னையில் மற்றொரு நபரிடம் பணத்தை கொடுக்க வந்து, காத்திருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஆர்.பி.எப். போலீஸார் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நரேஷ் கொண்டு வந்த ரூ.38 லட்சம் பணத்தை கைப்பற்றினர். மேலும், நரேஷிடம் ஆர்.பி.எப். மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து