முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் விபத்து: கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      தமிழகம்
gold 2024-01-04

Source: provided

தூத்துக்குடி  சாத்தான்குளம் விபத்து நடந்த கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள்மற்றும் பொருட்களை மீனவர்கள் மீட்டனர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெள்ளாளன் விளையைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் மோசஸ் (வயது 50). கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வரும் இவர், அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மோசஸ் தனது சொந்த ஊரான வெள்ளாளன்விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக 3 நாட்களுக்கு முன் இரவில் குடும்பத்தினர், உறவினர்களுடன் காரில் புறப்பட்டு வந்தார்.  தூத்துக்குடி மாவட்ட எல்லையான சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் அருகில் சென்றபோது, மோசஸின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தரைமட்ட கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் பாய்ந்தது.   அப்போது காரில் இருந்து வெளியே வந்த மோசஸ் மகன் கெர்சோம் (29), ரவி கோயில்பிச்சை மகள் ஜெனிபா எஸ்தர், கெர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கிணற்றில் தத்தளித்த 3 பேரையும் மீட்டனர். தொடர்ந்து கிணற்றில் காருடன் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனாலும் கிணற்றுக்குள் கார் மூழ்கியதால் உள்ளே சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. கிணற்றில் மூழ்கிய காரில் இருந்த மோசஸ், அவருடைய மனைவி வசந்தா (49), சந்தோஷ் மகன் ரவி கோயில்பிச்சை, அவருடைய மனைவி கெத்சியாள் கிருபா, கெர்சோம் மகன் ஸ்டாலின் (1½) ஆகிய 5 பேரும் தண்ணீருக்குள் மூழ்கினர்.

 தொடர்ந்து இரவில் அதிக ஒளிபாய்ச்சும் மின்விளக்கு, அதிக இழுவைத்திறன் கொண்ட ராட்சத கிரேன் மூலம்  சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து குழந்தை ஸ்டாலின் உள்பட5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இந்தநிலையில், கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், 20 சவரனுக்கு மேற்பட்ட நகைகள் இருப்பதாக விபத்தில் உயிரிழந்த மோசஸ் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.  இதையடுத்து  தூத்துக்குடி முத்து குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் நகைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீரில் மூழ்கி கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை மீனவர்கள் மீட்டனர். நகைகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை தி.மு.க. எம்.பி., கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து