முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Padmanabhaswamy 2024-10-20

Source: provided

திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவில் ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான 'பங்குனி ஆறாட்டு' ஊர்வலத்தின்போது, சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படுகிறது.

இந்த ஊர்வலமானது திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்கிறது. இதனை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபசுவாமி கோவில் ஆறாட்டு ஊர்வலத்திற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது. அந்த வகையில், பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று பங்குனி ஆறாட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 4 முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படும் என்றும், இந்த சமயத்தில் விமானங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருவனந்தபுரம் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து