முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையை பந்தாடிய 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய மும்பை

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      விளையாட்டு
Mumbai 2024-04-05

Source: provided

மும்பை : வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம்  நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது.

சவாலான இலக்கு...

ஐ.பி.எல். 38-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வான்கடே திடலில் எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் திரட்டியது. அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 32 பந்துகளில் 50 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். அறிமுக வீரர் ஆயுஷ் மாத்ரே தன் பங்கிற்கு 15 பந்துகளில் 32 ரன்களை அதிரடியாக திரட்டியதால் சென்னை அணியால் மும்பைக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

அபார வெற்றி... 

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவும் சூர்யகுமார் யாதவும் வான்கடேவில் சிக்ஸர் மழை பொழிந்தனர். ரோஹித் சர்மா 76 ரன்களும்(45 பந்துகளில், 6 சிக்ஸர், 4 பௌண்டரி), சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள்(30 பந்துகளில், 5 சிக்ஸர், 6 பௌண்டரி) விளாச அந்த அணி 15.4 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடைசி இடத்தில்...

ஏற்கெனவே 5 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள சென்னை அணிக்கு இது 6-ஆவது தோல்வியாகும். கடைசியாக லக்னௌவுக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை இன்று தோல்வி கண்டதால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து