முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 17 ல் வெளியாகும் மிஷன் இம்பாசிபிள்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      சினிமா
Mission-Impossible 2025-04-

Source: provided

ஹாலிவுட் மிகவும் பிரபலமான ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட பாகங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் சண்டை காட்சிகள் ஆக்‌ஷன் ஜானர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. இதுவரை ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட தொடர்களில் ஏழு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்போது அதன் எட்டாவது பாடம் ‘மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெகனிங்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. வழக்கம் போல் டாம் குரூஸின் டூப் இல்லாத சண்டைக் காட்சிகள் ரசிகர்களை வியக்கவைத்தது. குறிப்பாக சமீபத்தில் வெளியான 8ஆயிரம் அடி உயரம் வரை ஏரோபிளேனில் டாம் குரூஸ் பறக்கும் காட்சி இணையத்தில் வைரலானது. இப்படம் அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 14ஆம் தேதி ப்ரீமியர் செய்யப்படுகிறது. பின்பு மே 23ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது உலகளவில் வெளியாகும் நாளுக்கு 7 நாள் முன்பாக இப்படம் ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரியே இதனையும் இயக்கியுள்ளார். பாராமௌண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து