முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      இந்தியா
pak

டெல்லி, ஜம்மு காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா உடைய கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டது.  அமைச்சர் கவாஜா ஆசிப், "இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் இந்தியா, அதன் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது. இதில் பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் உடைய சேனல் மற்றும் பிரபல செய்தி நிறுவனங்களின் சேனல்களும் அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து