முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 வயது வீரர் வைபவ் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rajasthan-team 2024-03-29

Source: provided

ஜெய்ப்பூர் : இளம் வீரர் வைபவ் அதிரடி சதத்தால், குஜராத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி  இலக்கை 15.5 ஓவரில்  எட்டி ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது.

209 ரன்கள் குவிப்பு...

ஐ.பி.எல். தொடரின் 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 வைபவ் அதிரடி சதம்...

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரர் வைபவ் 35 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 101 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால் அரை சதம்... 

அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசினார். அடுத்து வந்த நிதிஷ் ரானா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து