முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர ஆலோசனை...

முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து, மற்ற போட்டிகள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), நேற்று (மே.9) அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன், “ஐ.பி.எல். தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்” எனத் தெரிவித்துதார். "நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் தொடர்வது நல்லதல்ல" என்று பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

காலவரையின்றி...

இதனையடுத்து ஐ.பி.எல். 2025 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு... 

அந்த அறிவிப்பில், “நடப்பு ஐ.பி.எல். 2025 தொடர் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த முடிவு ஐ.பி.எல். நிர்வாகக் குழுவுடன் அதன் பங்குதாரர்கள் நடத்திய முறையான ஆலோசனைக்குப் பின்னரே எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உரிமையாளர்களும் வீரர்களின் உணர்வுகள், மற்றும் ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், ரசிகர்களின் உணர்வுகளை முன்வைத்து இந்த முடிவை பரிந்துரைத்தனர்.

தேசத்துடன் நிற்கிறது...

நமது படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பி.சி.சி.ஐ. முழு நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளையில், அனைத்து பங்குதாரர்களின் கூட்டு நலனுக்காகவும் செயல்படுவது விவேகமானது என்று வாரியம் கருதியது. அதன் பேரில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில், பி.சி.சி.ஐ. தேசத்துடன் உறுதியாக நிற்கிறது. இந்திய அரசு, நமது படைகள் மற்றும் நாட்டு மக்களுடன் நாங்கள் ஒன்றுபடுவதை வெளிப்படுத்துகிறோம். அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உறுதியான பதிலடி கொடுத்து, ​​ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாட்டைப் பாதுகாத்துவரும் நமது படைகளின் துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு வாரியம் மரியாதையை உரித்தாக்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து