முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரை தடுத்து வாக்குவாதம்: 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      தமிழகம்
Admk-mla-2025-05-09

அரூர், அரூர் அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரை ஆலைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று (மே 9)  வந்தார். அப்போது ஆலையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார் (அரூர்) கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி) ஆகியோர் தடுத்து நிறுத்தி , ஆலை செயல்பாடுகள் குறித்து சட்டசபையில் தவறான தகவல் கூறியதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்க. காவல் துறையினர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களுடன் வந்த அ.தி.மு.க.வினரை தடுத்து, அமைச்சரை ஆய்வு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கு நடந்த விவசாயிகள் சங்க ஆய்வு கூட்டத்திலும் இரண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று பேசினர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி பேசும்போது, “அமைச்சர் சட்டசபையில் பேசும்போது சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ள இணை மின் நிலையம் 40% பணிகள் நடைபெற்றதாக அமைச்சர் தவறான தகவல் தருகிறார்” எனக் கூறினார். இதையடுத்து அங்குள்ள தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதனால் திமுக - அ.தி.மு.க.வினர் இடையே மோதல் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் போலீஸார் இரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றி, கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். அவர்களுடன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பசுபதி மற்றும் 19 அ.தி.மு.க.வினர் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இச்சம்பவத்தால் சர்க்கரை ஆலைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து