எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆங்கில பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நீங்கள் பெற்ற சட்ட வெற்றியின் அரசியல் முக்கியத்துவம் என்ன?
பதில்:- மாநில உரிமைகளுக்கான சட்ட போராட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு என்பது ஒரு மைல்கல். நியமன பதவியில் இருக்கும் கவர்னர் என்பவர் சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதலளிக்க கடமைப்பட்டவர் என்பதை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. நமது அரசமைப்பு சட்டத்தின் மாண்பை காப்பாற்றியிருக்கும் அம்சமாகும்.
கேள்வி:- கவர்னர் ஆர்.என். ரவி உடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
பதில்:- தனிப்பட்ட முறையில் கவர்னர், பிரதமர் என யாருடனும் எங்களுக்கு நேரடி பகையில்லை. அவரவர் பதவிக்குரிய மதிப்பை உரிய முறையில் அளித்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் கவர்னர்களை கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கவர்னர் மாளிகையும் பல்கலைக்கழகங்களும் ஜனநாயகம் வேட்டையாடப்படும் இடங்களாக மாறியிருக்கின்றன. தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என். ரவி திருந்த மாட்டார் என்பதை ஒரு பொதுவிழாவிலேயே தெரிவித்திருக்கிறேன்.
கேள்வி:- மத்திய அரசின் அதிகாரத்திற்கு எதிரான தென் மாநிலங்களின் கூட்டு எதிர்ப்பை நீங்கள் வழிநடத்துகிறீர்கள். இது தேர்தல் ஆதாயங்களாக மாறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்:- மாநில உரிமைக்கான குரலை 1957 முதலே தி.மு.க. நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறது. 1962-ல் மாநிலங்களவையில் அதனை அண்ணா எழுப்பினார். 1969-ல் முதல்வராக கருணாநிதி தனது முதல் டெல்லி பயணத்தின்போதே மாநில உரிமைகளை நிலைநாட்ட, குழு அமைக்கப்படும் என்றார். ராஜமன்னார் குழுவின் அறிக்கையை பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானத்தை அனைத்து மாநில முதல்வர் களுக்கும் அனுப்பிவைத்தார். தி.மு.க முன்னெடுத்த அந்த குரலைத்தான் பிற மாநிலங்களும் எதிரொலித்தன. இப்போதும் மாநில உரிமைகளுக்கான நடவடிக்கைகளை தி.மு.க. மேற்கொள்கிறது. இது வெறும் தேர்தல் ஆதாயத்திற்கானதல்ல; நாட்டின் ஒருமைப்பாடு சிதையாமல் இருப்பதற்கான பாதுகாப்பு.
கேள்வி:- பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அல்லாத பிற மாநிலங்களில் நிதி பகிர்வு தேக்கமடைந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூறுகின்றன? இந்த பிரச்சினையில் நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் ஒரு சாத்தியமான தீர்வாக இருக்குமா?
பதில்:- இந்தி மொழி திணிப்பை ஏற்காததால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. தமிழ்நாட்டை போலவே கேரளா, மேற்கு வங்காளம் போன்ற பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூட பேரிடர் நிவாரண நிதியை உரிய முறையில் வழங்கவில்லை. 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடோ, வரிப்பகிர்வோ மத்திய பா.ஜ.க. அரசால் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நலன் சார்ந்த சாதகமான எந்த தீர்வுக்கும் பா.ஜ.க. தயாராக இல்லை என்பதையே இவை காட்டுகின்றன.
கேள்வி:- உங்கள் நான்கு ஆண்டுகால ஆட்சியில், நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் அமைதித்தன்மைக்கும் எவ்வித இடையூறுமில்லாத நிலையில், இடையூறு செய்ய நினைக்கும் அரசியல் சக்திகளின் சதிவேலைகளை கண்டறிந்து முறியடித்தும், மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்.
கேள்வி:- தற்போதைய பதவிக்காலத்தில் 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தி.மு.க. அரசிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
பதில்:- 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி, இன்று 9.69 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிர்ந்து நடைபோட வைத்திருக்கிறோம். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமத்துவ – சமூகநீதி லட்சியத்தோடு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நிர்ணயித்து கொண்டு கடமையாற்றி கொண்டிருக்கிறோம்.
கேள்வி:- 2026 சட்டமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆட்சியை பிடிக்க தி.மு.க எவ்வாறு தயாராகி வருகிறது?
பதில்:- தி.மு.க. தன் கொள்கை கூட்டணியுடன் வலிமையாக இருக்கிறது. அந்த வலிமையை எதிர்த்து வெற்றி பெற முடியாதவர்கள், தி.மு.க.வை வீழ்த்தலாம் என்று எந்தவித கொள்கையும் இல்லாமல் கூட்டணி சேர்ந்திருப்பதை மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். தி.மு.க.வின் கொள்கை கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அ.தி.மு.க.வினர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்மையான பலனை தந்திருப்பதாலும் 2026-ல் மீண்டும் வெற்றி பெறும் அளவிற்கு தி.மு.க.வும்-அதன் கூட்டணி கட்சிகளும் வலிமையாக இருக்கின்றன. எதிரணியினர்தான் தங்களுக்கு சவால் யார் என்பதை தேட வேண்டும்.
கேள்வி:- பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலை வைத்துதான் தி.மு.க. தேர்தல்களில் வெற்றி பெறுகிறது என்ற ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களை எடுத்து தங்கள் ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியை மறைக்க பார்க்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளதே?
பதில்:- தி.மு.க. என்பது பவளவிழாவை நிறைவு செய்துள்ள இயக்கம். இந்த இயக்கம், தமிழரின் இன, மான, மொழி உணர்வுகளுக்கு இழுக்கு ஏற்படும்போதெல்லாம், அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் அதனை எதிர்த்து போராடுகிறோம். இந்த எதிர்ப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்ப்பாக இருப்பதால் நீங்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், பா.ஜ.க.வும் அதன் கொள்கைகளும் தேர்தலை கடந்து எதிர்க்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை விளைவிக்கின்ற அரசியலைத்தான் தி.மு.க. என்றும் செய்யும். அதற்கு தடையாக உள்ளவர்களுக்கு எதிராக போராடும்.
கேள்வி:- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் தேர்தல் களம் இப்பொழுதே குடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. 19 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- ஆட்சி பொறுப்பில் இருந்தபோது, தங்களுடைய பதவியை காப்பாற்றி கொள்ள தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து, பா.ஜ.க.வின் பாதங்களை தாங்கத்தொடங்கிய அ.தி.மு.க. தொடர்ந்து பா.ஜ.க.வின் கைப்பாவையாகத்தான் இருந்து வருகிறது. இதில் பிரிவு – உறவு என்பது மக்களை ஏமாற்ற அவர்கள் ஆடிய நாடகம்தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் நேரடி கூட்டணியாக சேர்ந்து நின்றாலும், கள்ளக்கூட்டணியாக தனிதனியாக நின்றாலும் இவர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஏற்கனவே இது தோல்வி கூட்டணிதான். இந்த முறையும் மக்கள் நிராகரிப்பார்கள்.
கேள்வி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அ.இ.அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தங்கள் கூட்டணியை பலப்படுத்தப்போவதாகவும் மேலும் சில கட்சிகள் தங்கள் அணியில் இணையும் என்று கூறுகிறார்கள். அப்படி நடந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி உங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்பதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா?
பதில்:- தங்களது கூட்டணிக்கும் கொள்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே கூறியிருக்கிறார். பதற்றத்தில் கொள்கை அற்ற அவர்கள்தான் ஒன்றிணைகிறார்கள். எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை. மக்கள் தி.மு.க.வின் பக்கம் இருக்கிறார்கள்.
கேள்வி:- தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த முறை 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் தேர்தலை சந்திக்கவிருக்கிறீர்கள். இதே கூட்டணி நீடிக்குமா அல்லது பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. போன்ற கட்சிகள் இக்கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமத்துவ - சமூகநீதிப் பாதையில் சிறப்பாக செயல்படுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வெற்றியை வழங்குகின்றனர். இந்த வெற்றி பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்டம்
13 May 2025பீஜிங் : பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில்100-க்கும் மேற்பட்டோர் பலி
13 May 2025பமாகோ : மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு இ.பி.எஸ். பதில்
13 May 2025சென்னை : பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.
-
ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
13 May 2025ஜம்மு : ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட கொடி யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு
13 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா நடத்துகிறது.
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
எல்லை வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை
13 May 2025புதுடில்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதற்கான பேச்சுவார
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பஹல்காம் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
13 May 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு: சி.பி.ஐ. வழக்குரைஞர்
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ல