முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      இந்தியா
Suicide 2023 04 29

அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பங்கலி கலான், தரிவால், சங்கா மற்றும் மராரி கலான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் அமிர்தசரஸ் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமிர்தசரஸ் மாவட்ட ஆட்சியர் சாக்ஷி சாவ்னி மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார். எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அனைவரும் ஒரே இடத்தில் இருந்து மதுபானங்களை வாங்கியதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் சிலர் திங்கள்கிழமை காலை இறந்தனர். உள்ளூர்வாசிகள் காவல்துறைக்கு தெரிவிக்காமல் அவர்களை தகனம் செய்தனர். சிலர் உண்மையை மறைத்து, பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பால் இறந்ததாகக் கூறினர். 

இறப்புகள் குறித்து திங்கள்கிழமை தாமதமாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது,என்று மஜிதா ஒன்றிய அதிகாரி ஆப்தாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய சப்ளையர்களான பிரப்ஜித் சிங், சாஹிப் சிங் ஆகிய இருவர், சப்ளையர்களிடமிருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி கிராமங்களுக்கு விநியோகித்த நான்கு குற்றவாளிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து