முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை தொட்டது

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
Mettur Dam 2023-06-02

மேட்டூர், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது. இதனிடையே நேற்று முன்தினம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மட்டும் அல்லாது மேட்டூர் சுற்று வட்டாரத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் 3 நாட்களில் 191.2 மில்லி மீட்டர் மழை கொட்டியது. தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 6,233 கன அடியாக இருந்த நிலையில் நேற்று விநாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.82 அடியில் இருந்து, 109.33 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 76.74 டி.எம்.சியிலிருந்து, 77.46 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் அணை நீர்மட்டம் 0.81 அடியாகவும், நீர் இருப்பு 1.12 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து