முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழுதேனா? சூர்யவன்ஷி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      விளையாட்டு
Suryavanshi 2025-04-29

Source: provided

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  பல இளம் வீரர்கள் அறிமுகமாகி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.  குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.  லக்னோவுக்கு எதிரான 36-வது லீக் ஆட்டத்தில் ஐ.பி.எல். தொடரில் அறிமுகம் ஆன வைபவ் சூர்யவன்ஷி சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து கெரியரை அதிரடியாக தொடங்கினார். 

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் எப்போது அழுதேன்? அங்கிருந்த மின் விளக்குகள் மற்றும் எல்.இ.டி. திரைகளைப் பார்த்தேன். அதிலிருந்து வந்த பிரகாசமான வெளிச்சம் என்னை அடிக்கடி சிமிட்ட வைத்தது. அதனால் கண்களை தேய்த்துக்கொண்டே வெளியேறினேன். ஆனால் நான் அழுகிறேன் என்று மக்கள் நினைத்தார்கள். உண்மையில் நான் அழவில்லை" என்று கூறினார்.

______________________________________________________________________________________________________

அயர்லாந்து வீரர்கள் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அயர்லாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த முக்கிய ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் மற்றும் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் ஆகியோர் காயமடைந்ததை தொடர்ந்து இருவரும் இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அயர்லாந்து ஒருநாள் அணியில் அறிமுக ஆல் ரவுண்டர் ஜோர்டன் நீல் மற்றும் பேட்டர் ஸ்டீபன் தொஹனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

______________________________________________________________________________________________________

பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி

 பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் நேற்று  முதல் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் ஹூவாங் யு காய் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 9-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஸ்ரீகாந்த், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 21-12, 21-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

______________________________________________________________________________________________________

சாதனையை சமன் செய்த பெங்களூரு 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு  3 அணிகள் தகுதிபெற்றுவிட்டன. அதன்படி குஜராத் , பெங்களூரு , பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் சாதனையை பெங்களூரு அணி சமன் செய்துள்ளது. அதிகமுறை (10) பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் மும்பை அணியை சமன் செய்துள்ளது. அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் சென்னை அணி (12) முதலிடத்தில் உள்ளது.

______________________________________________________________________________________________________

மலிங்கா சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல். தொடரின் 61ஆவது போட்டி நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது. இப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை ஐதராபாத் வீரர் ஹர்ஷல் படேல் முறியடித்தார். ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மலிங்கா (2,444 பந்துகள்), சாஹல் (2,543 பந்துகள்), ப்ராவோ (2,656 பந்துகள்), பும்ரா (2,832 பந்துகள்) ஆகியோர் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து