முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, மும்பையில் அதிகரிக்கும் தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Corona 2023 04 02

Source: provided

புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், முந்தைய கொரோனா அலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும். 

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில் மே மாதத்தில் மட்டும் 95 பேர் பாதிக்கப்பட்டனர். 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க, காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்ப்ளூயன்சாவால் ஏற்பட்டதாகக் கூறப்படும் காய்ச்சலுக்கு கொரோனா தொற்றுடன் தொடர்பு இருப்பது அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சிறிய அளவில் இருந்து வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வழக்கம்போல முகக்கவசம் அணிவது மற்றும் அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து