முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்கோவில் ரஷ்ய செனட்டர்களுடன் கனிமொழி எம்.பி தலைமையிலான தூதுக் குழு சந்திப்பு ரஷ்ய செனட்டர்களுடன் கனிமொழி தலைமையிலான குழு சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      உலகம்
Kanimozhi 2023-10-13

Source: provided

மாஸ்கோ: தி.மு.க. எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு  மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு கவுன்சில் குழுவின் முதல் துணைத் தலைவர் உட்பட செனட்டர்கள் பலரையும் சந்தித்தது.

இது குறித்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ' ரஷ்யாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத் தலைவர் ஆண்ட்ரி டெனிசோவ் மற்றும் பிற செனட்டர்களுடன் எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு சந்திப்பு நடத்தியது' என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார், அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவுக்கு இந்தியா - ரஷ்யா உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

தி.மு.க. எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு நேற்று மாஸ்கோவுக்கு வந்தது. இந்தக் குழுவை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார் வரவேற்றார். ரஷ்யா, ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தக் குழு பயணம் செய்கிறது. இது ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத போராட்டத்தை எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து