முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்: மேத்யூஸ் திடீர் ஓய்வு

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      விளையாட்டு
58

Source: provided

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் . ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்காளதேசத்தத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கமளித்துள்ளார்.

118 டெஸ்ட் போட்டிகளில், மேத்யூஸ் 44.62 சராசரியுடன் 8,167 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்த 3வது வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளார். 

ஹம்பர்க் ஓபன்:  ரூப்லெவ் முன்னேற்றம்

ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது . இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லூசியானோ டர்டேரி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல்  சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் ரூப்லெவ் மோதுகிறார்.

கிரிக்கெட் மைதானம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் 4 மைதானங்கள், 3 டா்ப் வசதிகள் உள்ளன. வலைப் பயிற்சிக்காக 10 டா்ஃப் விக்கெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவா் பி. அசோக் சிகாமணி தலைமை வகித்தாா். முன்னாள் இந்திய வீரா்கள் வி.வி. குமாா், சத்விந்தா் சிங் ஆகியோா் புதிய மைதானங்களை திறந்து வைத்தனா். திருவள்ளூா் ஆட்சியா் மு. பிரதாப், கோஜன் கல்விக் குழும தலைவா் ஜி. நடராஜன், துணைத் தலைவா் என். விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா். டி.என்.சி.ஏ. துணைத் தலைவா் ஆடம் சேட், செயலாளா் ஆா்.ஐ. பழனி, பொருளாளா் டிஜே. சீனிவாசராஜ், இணைச் செயலாளா் ஆா்.என். பாபா ஆகியோா் பங்கேற்றனா்.

ஆர்.சி.பி.: பில் சால்ட் விலகல்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. இந்த நிலையில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்நிலையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு சில தினங்களில் குழந்தை பிறக்கவுள்ளதால் பிளே ஆப் சுற்றை தவறவிடுகிறார். இந்த முறையாவது ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்வதற்கு உத்வேகத்தில் இருக்கும் நிலையில் இவரது விலகல் ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவாக இருக்கும். இவர் நடப்பு தொடரில் 9 போட்டிகள் விளையாடி 239 ரன்கள் குவித்துள்ளார்.

மீண்டும் ஜோஸ் ஹேசில்வுட்?

ஐ.பி.எல். 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நான்கு நாள்களில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ளன.  குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக அந்த அணிக்காக விளையாடவில்லை.  

இந்த நிலையில், தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜோஸ் ஹேசில்வுட் பிளே ஆப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. பிளே ஆப் சுற்று வருகிற மே 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபியுடன் மீண்டும் இணைந்தால், அந்த அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசில்வுட் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து