முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவொற்றியூரில் சூறை மீன்பிடி துறைமுகம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மே 28-ம்தேதி திறக்கிறார்

சனிக்கிழமை, 24 மே 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, சென்னை திருவொற்றியூரில் ரூ 275 கோடி மதிப்பீட்டிலான சூறை மீன்பிடி துறைமுகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் , 28 ம்தேதி திறந்து வைக்கிறார்.

சென்னை, திருவொற்றியூர் குப்பத்தில் ரூ.275 கோடி மதிப்பீட்டில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு அதன் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. இதன் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா  வரும் 28-ம்தேதி நடைபெறுகிறது. 

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய துறைமுகத்தை திறந்து வைத்து பல்வேறு நலத்தி்டட உதவிகளை வழங்குகிறார் இதனையொட்டி திருவெற்றியூர் துறைமுகத்தை மீன்வளம், மீனவர் நலத்துறைமற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமயம் மற்றும்அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்நேரில் சென்று பார்வையிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம்மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் ந.சுப்பையன்  எம்எல்ஏக்கள்  எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர்  (திருவொற்றியூர்), மீன்வளத்துறை ஆணையர் கஜலட்சுமி, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர்.கட்டா ரவிதேஜா, மண்டலக் குழுத்தலைவர்கள் தனியரசு,.ஏ.வி.ஆறுமுகம், அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளஉடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து