முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      விளையாட்டு
Joe-Rudd 2024-10-08

Source: provided

நாட்டிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார்.

முதல் டெஸ்ட்...

இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக பென் டக்கட் மற்றும் ஜாக் கிராவ்லி களம் புகுந்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கிராவ்லி 124 ரன்...

பென் டக்கெட்டும், ஜாக் கிராவ்லியும் முதல் விக்கெட்டுக்கு 231 ரன்கள் திரட்டினர். இதில் பென் டக்கட் 140 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 124 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த ஆலி போப்பும் அதிரடியாக ஆடினார். இதனால் ரன் மளமளவென உயர்ந்தது. மறுபுறம் ஜோ ரூட் 34 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹாரி புரூக் களம் புகுந்தார். அதிரடியாக ஆடிய ஆலி போப்பும் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 498 ரன்கள் குவித்தது. ஆலி போப் (169 ரன்), ஹாரி புரூக் (9 ரன்) களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஜோ ரூட் 13,000...

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் 28 ரன் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார்.

அதிக ரன் அடித்தவர்கள் பட்டியல்:

1) சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 15,921 ரன்.

2) ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 13,378 ரன்.

3) ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 13,289 ரன்.

4) ராகுல் டிராவிட் (இந்தியா) - 13,288 ரன்.

5) ஜோ ரூட் (இங்கிலாந்து) - 13,006 ரன் *.

6) அலஸ்டர் குக் (இங்கிலாந்து) - 12, 472 ரன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து