முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் தலைமை காஜி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் வயது முப்பு காரணமாக, தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முஹம்மது அயூப் (84) மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 

தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் அவர்களின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரது தொண்டினை நினைவுகூர்கின்ற இவ்வேளையில், அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.  

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 

இஸ்லாமிய சட்ட திட்டங்களை (ஷரியா) செயல்படுத்துவதிலும், சமூகத்திற்கு வழிகாட்டுவதிலும் கடமை உணர்வோடு, பொறுப்பாக, சிறப்பாக செயல்பட்டவர். படித்து பட்டம் பெற்ற பெருமை மிக்க அறிஞர். சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்க்க பாடுபட்டவர். இஸ்லாமியர்களுக்கு நல் வழி காட்டுவதற்கு அக்கறையோடு பணியாற்றியவர். இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தவர். இரக்க குணம் மிக்க இவர் அனைவராலும் போற்றப்பட்டவர். 

பா.ம.க. தலைவர் அன்புமணி 

அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியரான அவர், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியத் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். தமிழகத்திலுள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, கலாச்சாரம் குறித்து வழிகாட்டினார். அனைவர் மீதும் அன்பு செலுத்திய அவர், மத நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்டார்.  .

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 

அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற்றவரும், தமிழக அரசின் தலைமை காஜியுமான சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தலைமை ஹாஜி அவர்களின் பிரிவால் வருந்தும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 

சுமார் 40 வருடங்களாக தமிழக அரசு தலைமை காஜியாக கவுரவ பொறுப்பு வகித்தவர், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதும் நினைவு கூறத்தக்கது. அவரை இழந்து வாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சார்பில், தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் உடலுக்கு, அமமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து