முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்: ஜூன் 9 வேட்புமனு தொடக்கம்

திங்கட்கிழமை, 26 மே 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19-ம் தேதி அந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 9 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மே 26) வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 9 வேட்புமனு தொடங்குகிறது. வரும் ஜூன் 9-ம் தேதி இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்றும், ஜூன் 10-ம் தேதி, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12-ம் தேதி இறுதி நாளாகும். ஜூன் 19-ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோல், அசாம் மாநிலத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும், இத்தேர்தலில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க கூட்டணிகள் சார்பில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும், என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அல்லது ம.தி.மு.க. தலைவர் வைகோ இருவரில் யாருக்கு ஒரு சீட் போகும் என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் ஒரு சீட்டை பெறும் முயற்சியில் உள்ளது. இதற்காக, ஈரோடு இடைத்தேர்தலின்போது டீல் பேசப்பட்டது என கூறப்படுகிறது.

இதேபோன்று, அ.தி.மு.க.வில் தே.மு.தி.க.வுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என முன்பே கூறப்பட்டது என பிரேமலதா கூறியுள்ளார். மற்றொரு சீட், கூட்டணியில் உள்ள பா.ஜ.க. மற்றும் ஓ. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடனேயே இறுதி செய்யப்பட முடியும். இதனால், பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என பார்க்கப்படுகிறது. எனினும், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் இருந்து யார் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், தி.மு.க.வைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா மற்றும் பி.வில்சன், ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து