முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்டியா கூட்டணியை அசைக்க முடியாது: செல்வப்பெருந்தகை

திங்கட்கிழமை, 26 மே 2025      தமிழகம்
Selvabaru 2023-02-19

Source: provided

திருச்சி : இன்டியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த நிதியாண்டில் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளார்கள்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுகிறார்கள். இது சர்வாதிகாரம்.  தமிழ்நாட்டு அரசு மீதும், அமைச்சர்கள் மீதும், அரசு துறைகள் மீதும் தொடர் தாக்குதலை மத்திய அரசு நடத்துகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்துள்ளது. மாநிலங்களுக்கான கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற மாட்டோம். எதுவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தால் எதற்காக மத்திய அரசு ?

பா.ஜ.க விற்கும் அ.தி.மு.க.விற்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மிகத்தை அரசியலாக்குகிறார்கள். கலவர பூமி ஆக்குவது தான் அவருடைய நோக்கமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தேச பக்தர்களை கொண்ட கட்சி. ஆனால் பா.ஜ.க. தேசத்தை கொள்ளை அடித்து நாட்டையே துவம்சம் செய்யும் கட்சி.

இன்டியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. இது எக்கு கோட்டை போல் உறுதியான கூட்டணி. இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து