முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, நீலகிரிக்கு மே 30-ம் தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை

திங்கட்கிழமை, 26 மே 2025      தமிழகம்
Weather-Center 2 2025-02-28

Source: provided

சென்னை : கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியின் ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவ லாஞ்சியில்  35 செ.மீ., கோவை மாவட்டம்  சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் சிறுவாணி அணை, ஆழியார் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பில்லூர் அணை  நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து 18 ஆயி கன அடி நீர் திறக்கப்பட்டது.  

நீலகிரி மாவட்டத்தில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடுரோட்டில் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்க பாதிக்கப் பட்டுள்ளது. பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப் பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் சேதம் அடைத்துள்ளன.

உதகை, கூடலூரில்  தொடரும் கனமழையால் சோலையார் பகுதியில் மேற்கூரை உடைந்து வீடு சேதம் அடைந்தது. வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வால்பாறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை தொடர்கிறது. வரட்டுப்பாறையில் மின்கம்பம் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சித்தலூரில் 100 மீட்டர் நீள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து