முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விதித்த வரிக்கு காலக்கெடுவை நீட்டித்தார் அதிபர் டிரம்ப்

திங்கட்கிழமை, 26 மே 2025      உலகம்
Trump 2024 08 17

Source: provided

நியூயார்க் : ஐரோப்பியவுக்கு விதித்த வரிக்கு காலக்கெடுவை நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இந்த வரிவித்தபை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனக்கு சொந்தமாக ட்ரூத் சோசியல் சமூக ஊடக பதிவில், "ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வர்த்தகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான 50 சதவீதம் வரி மீதான ஜூன் 1 ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரினார். ஜூலை 9, 2025 அன்று நீட்டிப்புக்கு நான் ஒப்புக்கொண்டேன். அவ்வாறு செய்வது எனது பாக்கியம்.

பேச்சுவார்த்தைகள் விரைவாக தொடங்கும் என்று ஆணையத் தலைவர் கூறினார். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து