முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ம் தேதி கொண்டாடப்படும்: அரசு தலைமை காஜி

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்
Bakrit-festival 2023 06 20

Source: provided

சென்னை: பக்ரீத் பண்டிகை வருகிற 7-ந்தேதி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். புனித மெக்காவுக்குச் சென்று வர சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல விரும்புவார்கள். இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் இந்தக் கடமை நிறைவேறுகிறது.

அதே நாளில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையைக்  கொண்டாடுகிறார்கள். ஹஜ் கடமை நிறைவேறுவதால் இது 'ஹஜ்ஜுப் பெருநாள்' என்றும், இறைவனின் கட்டளைக்கு ஏற்ப தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட முயன்ற நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் 'தியாகத் திருநாள்' என்றும் அழைக்கப்படுகிறது.

'துல்ஹஜ் மாத பிறை நேற்று முன்தினம் (28-ந் தேதி) தென்பட்டதைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும்' என்று தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது. இதே தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைமை ஹாஜி தாவூத் கைஸரும் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து