முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமியுடன் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

சனிக்கிழமை, 31 மே 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

2024 மக்களவைத் தோ்தலில் அ.தி.மு.க. தலைமையில் தே.மு.தி.க. இடம்பெற்ற கூட்டணியும், பா.ஜ.க. தலைமையில் பா.ம.க. இடம்பெற்ற கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இந்நிலையில், கூட்டணி பேச்சுவாா்த்தையின் போது தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். மாநிலங்களவை உறுப்பினா் பதவி தொடா்பாக நேரடியாக அறிவிக்கப்படவில்லை.  இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினா் பதவி தங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் என்றும் தே.மு.தி.க. பொதுச் செயலா் பிரேமலதா கருத்து தெரிவித்திருந்தாா். 

 தங்களுக்கு உறுதியளித்தபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்க வேண்டும் என்றும் அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் தெரிவித்தாா். ஆனால், கூட்டணிப் பேச்சுவாா்த்தையின்போது, அப்படி ஏதும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தாா். 

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த சந்திப்பில், மாநிலங்களவை சீட் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் தெரியவந்துள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து