முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தக் லைப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரிய மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Tak-Life-Review 2025-06-09

Source: provided

புதுடில்லி : ‘தக் லைப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று (ஜூன் 9) தள்ளுபடி செய்து நீதிபதி பி.கே. மிஷ்ரா உத்தரவிட்டார்.

நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியானது. முன்னதாக, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், ‘தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது’ என்றாா். இந்தக் கருத்து மூலம் கன்னட மொழியை கமல் சிறுமைப்படுத்திவிட்டதாக கன்னட அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கா்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டாா்.

இந்த நிலையில், கன்னட அமைப்புகளின் எதிா்ப்பை மீறி இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், கர்நாடக திரையரங்க சங்கம் தரப்பிலிருந்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஓரிரு சமூக விரோத சக்திகள் கர்நாடகத்தில் தக் லைப் திரையிடப்படவுள்ள திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசர வழக்காக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும், மனுதாரர் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து