முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசைப்பற்றி பேச உரிமை கிடையாது: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி காட்டம்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
Ragupathy 2024-12-21

Source: provided

சென்னை : தி.மு.க. அரசைப் பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு விடுதி காவலாளி பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசை கடுமையாக சாடியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விடுதியில் தங்கியிருந்த 100- க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் வேறு யாரும் பாதிக்கப்பட்டனரா என தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. தி.மு.க. ஆட்சியும் முதலமைச்சரும் பெண்களுக்கு அரணாக இருப்பதால்தான் இந்த மாதிரி குற்றச் சம்பவங்களை எதிர்த்து தைரியமாக புகார் அளிக்க பெண்கள் முன் வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலை எல்லாம் மாற்றி பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பதோடு பெண்கள் பாதுகாப்பிலும் துளியும் சமரசமற்று செயலாற்றி வருகிறது தி.மு.க. அரசு.

கடந்தகால அதி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களே தாக்குதல்களுக்குள்ளாகிய மோசமான சூழல் நிலவியதை தமிழ்நாட்டு பெண்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. கடந்த அதி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அதி.மு.க. அரசு எப்படி கையாண்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதி.மு.க.வைச் சேர்ந்த குற்றவாளிகளை காப்பாற்ற புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தையே அதி.மு.க. குண்டர்களை விட்டு தாக்கிய கொடுமையும் அரங்கேறியது.

அப்படி பெண்களுக்கு எதிரான அதி.மு.க. ஆட்சியை நடத்திய பழனிசாமிக்கு தற்போது குற்றங்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பெண்களுக்கு ஆதரவாக இருந்துவரும் தி.மு.க. அரசைப்பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து