முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Gujarat 2024-10-14

Source: provided

காந்தி நகர் : குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், உயர்நீதிமன்றங்கள் என பல்வேறு மாநிலங்களில் இது தொடர்ந்து வருகின்றது. அந்தவகையில், குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு நேற்று காலை சுமார் 11.45 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நீதிமன்ற கட்டடத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும்,  மாலை வெடிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மண்டலம் 1-இன் பொறுப்பு துணை காவல் ஆணையர் சபின் ஹாசன் தெரிவித்தார்.

மேலும் சம்பவ இடத்துடக்கு உள்ளூர் காவலர்கள் உள்பட ஆறு குழுக்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ்-காந்தி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வளாகத்தில், அனைத்து நீதிமன்ற கட்டடங்கள், அறைகள், நிறுத்தப்பட்டிருந்த மற்றும் உள்ளே வந்த கார்கள் உள்பட போலீஸார் முழுமையான சோதனை நடத்தினர்.

சோதனைக்குப் பிறகு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திங்களன்று நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வை ரத்து செய்ததாக துணை காவல் ஆணையர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து