முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      விளையாட்டு
Cummins 2024-05-26

Source: provided

லார்ட்ஸ் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 43 ஆண்டு கால சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். 

ரபாடா அபாரம்...

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 56.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பியூ வெப்ஸ்டர் 72 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட் வீழ்த்தினார்.

கம்மின்ஸ் 6 விக்கெட்... 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 57.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 138 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பெடிங்ஹாம் 45 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது 2வது இன்னிங்சை ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 218 ரன்கள் முன்னிலை பெற்றது.  

281 ரன்கள் இலக்கு... 

தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  ஸ்டார்க் பொறுப்புடன் செயல்பட்டு ரன்களை திரட்டினார். அவர் 136 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 217 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம் மொத்தமாக ஆஸ்திரேலிய அணி 281 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 281 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  . 

43 ஆண்டு சாதனை... 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் 43 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். அதாவது, கம்மின்ஸ் முதல் இன்னிங்சில் 18.1 ஓவர்களில் 6 மெய்டனுடன் 28 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சிறந்த பந்து வீச்சு...

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்னிங்சில் ஒரு கேப்டனின் ஆகச் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் 101 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சிறந்த பந்து வீச்சாக இருந்தது. 43 ஆண்டு கால அந்த சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார். மேலும் ஐ.சி.சி. நடத்தும் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி ஒன்றில் சிறந்த பந்து வீச்சாகவும் இது அமைந்தது.

40-வது வீரர்...

மேலும், கம்மின்ஸ் எடுத்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 300-ஆக (68 டெஸ்ட்) உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 40-வது வீரர், ஆஸ்திரேலிய அளவில் 8-வது பவுலர் என்ற சிறப்பையும் கம்மின்ஸ் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து