எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தஞ்சாவூர் : கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 16) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரையில், “மாமன்னர் இராசராசன் ஆட்சி செய்த இந்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்த, நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணிற்கு வந்திருக்கிறேன். இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மேட்டூர் அணையை குறித்த தேதியில் திறந்து வைத்துவிட்டு, நேற்று மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணையையும் திறந்திருக்கிறேன்.
இப்படி, மேட்டூர் அணையையும், கல்லணையையும் குறித்த நேரத்தில் நேரில் வந்து திறந்து வைக்கும் முதலமைச்சர் நான் தான் என்று, முதல் முதலமைச்சராக பெருமைப்படுகிறேன். இதை இங்கு இருக்கக்கூடிய உழவர் பெருமக்களெல்லாம் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்… அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க, முக்கியமான அறிவிப்பை இங்கு வெளியிட விரும்புகிறேன்.
2021-22-ம் ஆண்டுமுதல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம், 276 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களுக்காக குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு 82 கோடியே 77 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அதுமட்டுமல்ல - தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக, டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன் பெறும் வகையில் 132 கோடியே 17 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கார் - குறுவை - சொர்ணவாரி பருவத்திற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தையும் உழவர் பெருமக்களின் நலனுக்காக துவங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், சுமார் 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதுபோல் தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் இருக்கும் சுமார் 8 இலட்சம் விவசாயிகளுக்கும் இந்த சிறப்புத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், 325 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரத்து 461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நாலாயிரத்து 127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அதுமட்டுமல்ல. இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 383 பேருக்கு 558 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இந்த விழாவில் வழங்கயிருக்கிறேன்
இந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்க அறிவிப்பு செய்தேன். அதன்பிறகு நானே தயங்கினாலும், அந்த பல்கலைக் கழகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்தான் வைக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தி.மு.க. கட்சி மட்டுமல்ல, எல்லா கட்சியும் கட்சி வேறுபாடில்லாமல் எல்லோரும் என்னிடம் வலியுறுத்தினார்கள். அதற்குப் பிறகுதான் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவை அனைவரின் ஒப்புதலோடு ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால், தஞ்சை மாவட்ட மாணவர்களின் உயர்கல்விக்கான அந்த சட்டத்துக்கு ஆளுநர் இப்போதுவரை ஒப்புதல் தரவில்லை. நாம் அனுப்பி வைத்தவுடன் அவர் ஒப்புதல் தந்திருந்தால், இன்றைக்கு (நேற்று) இந்த நிகழ்ச்சியிலேயே கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பேன். கடந்த மே 2 அன்று அனுப்பி வைத்தோம். 40 நாளுக்கு மேல் ஆனது. இன்னும் அனுமதி வரவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகாவது அவர் மாறியிருப்பார் என்று நினைத்தோம்… ஆனால், இன்னும் மாறவில்லை. கலைஞர் பல்கலைக்கழக மசோதா தொடர்பாக பலமுறை நாம் நினைவூட்டினோம். உயர் கல்வித் துறை அமைச்சரையும் “ஆளுநரை சென்று பாருங்கள்” என்று சொல்லியிருந்தேன். ஆனால், உயர் கல்வித் துறை அமைச்சரை சந்திக்க நேரம் தராமல் இழுத்தடிக்கிறார். இன்னும் நேரம் தரவில்லை. தெரியும். நேரம் கொடுத்தால் ஏதேனும் கேட்பார்கள் என்று… அதற்கு பயந்துகொண்டு சந்திக்க மறுக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கேட்கும் ஒரே கேள்வி என்றவென்றால், ஓர் ஆளுநருக்கு இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்? இப்படி ஆளுநர் ஒரு பக்கம் என்றால் - ஒன்றிய அரசு மற்றொருபக்கம் நிதி ஒதுக்காமல் உபத்திரவம் செய்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்து, நாம் எவ்வளவோ திட்டங்களையும், பல சாதனைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.
என்னுடைய 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் பார்க்காத தடையோ, எதிர்கொள்ளாத நெருக்கடியோ இல்லை. மிசாவையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். அரசியலில் எல்லா நெருக்கடிகளையும் – எல்லா எதிரிகளையும் – அவர்களின் சதி திட்டங்களையும் அவர்களோடு எதிர்த்துப் போராடியவன். அதையெல்லாம் முறியடித்துதான் இன்றைக்கு உங்களின் அன்போடு, உங்களுடைய ஆதரவோடு நான் முதலமைச்சராக அமர்ந்திருக்கிறேன். எல்லா வகையான எதிர்ப்புகளையும் தாண்டித்தான் இங்கு உங்கள் முன்னால் நின்றுகொண்டு இருக்கிறேன்.
எதிர்க்கட்சிகளின் அவதூறாக இருந்தாலும், மத்திய அரசின் ஓரவஞ்சனையாக இருந்தாலும், ஆளுநரின் அடாவடியாக இருந்தாலும், அனைத்தையும் தாண்டி நினைத்ததை செய்து முடிக்கும் துணிவும் – கொள்கை உறுதியும் - மக்களான உங்கள் ஆதரவும் எனக்கு இருக்கிறது. அந்த ஆதரவை எப்போதும் நீங்கள் தர வேண்டும் தர வேண்டும்.
இன்றைக்கு கும்பகோணத்தில் நம்முடைய கருணாநிதி பெயரால் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-07-2025.
31 Jul 2025 -
இரண்டு அடுக்கு டெஸ்ட்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
31 Jul 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும்.
-
ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: சரிவை சந்தித்த ஜெய்ஸ்வால்
31 Jul 2025துபாய்: ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சரிவை சந்தித்துள்ளார்.
தரவரிசை பட்டியல்...
-
பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுத்தது ஏன்..? இந்தியா விளக்கம்
31 Jul 2025பர்மிங்காம்: லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் (டபிள்யூ.சி.எல்.) தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது குறித்து இந்திய அணி காரணம் தெரிவித்துள்ளது.
-
கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை
31 Jul 2025புதுடெல்லி: கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
அதிக ரிஸ்க் எடுத்து விட்டேன்: காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்
31 Jul 2025லண்டன்: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாமல் சென்றது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
31 Jul 2025நெல்லை: 4-வது நாளாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கில்
31 Jul 2025லண்டன்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
-
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
31 Jul 2025சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வரை நேரில் சந்தித்தேன் தே.மு.தி.க. பிரேமலதா பேட்டி
31 Jul 2025சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது
31 Jul 2025திருநெல்வேலி: கொலையான கவின் செல்வகணேஷ், கொலை செய்ததாக சரணடைந்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணனை போலீசார் கைது செய்தனர்.
-
ஓவல் கடைசி டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்
31 Jul 2025லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
-
அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்
31 Jul 2025சிவகங்கை: திருப்புவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்த அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.
-
டாஸில் தோற்பது குறித்து கவலை இல்லை: கேப்டன் ஷுப்மன் கில்
31 Jul 2025லண்டன்: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம் என்று இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
பறக்கும் ரயில் நிறுவனம் மெட்ரோவுடன் எப்போது இணைக்கப்படும்? கனிமொழி
31 Jul 2025சென்னை: பறக்கும் ரயில் நிறுவனம் குறித்து பாராளுமன்றத்தில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
கோவையில் ஆக.5-ல் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
31 Jul 2025சென்னை, காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவும் - ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்கள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
31 Jul 2025புதுடில்லி: இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
-
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ்...!
31 Jul 2025சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியீடு
31 Jul 2025நெல்லை, என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்று சுர்ஜித்தின் சகோதரி தெரிவித்துள்ளார்.
-
கீவ் நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் பலி
31 Jul 2025உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாக்.கிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் சூழல் வரலாம்: ட்ரம்ப்
31 Jul 2025வாஷிங்டன், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
யு-19: சூரியவன்ஷிக்கு வாய்ப்பு
31 Jul 2025ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
-
கவினின் பெற்றோரை சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல்
31 Jul 2025தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி, ஆணவக் கொலை தொடர்பாக சட்டம் நிறைவேற
-
நட்புடன் நலம் விசாரிப்பு: பிரேமலதாவுக்கு முதல்வர் நன்றி
31 Jul 2025சென்னை: நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
எல்.பி.ஜி. சிலிண்டர் லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்
31 Jul 2025சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றது.