முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பார்லி. தொகுதிகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது : தஞ்சை திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
CM-3 2025-06-16

Source: provided

தஞ்சாவூர் : 'குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது. பார்லிமென்டில் தமிழக தொகுதிகள் குறையும் நிலை வந்து இருக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தஞ்சாவூரில், நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலேயே முதன் முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து தமிழகம் தான் சட்டமாக்கியது. சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கோரிக்கை.

தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கருணாநிதி. பெற்றோர் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று தற்போது யாரும் வாழ்த்துவது இல்லை. இதற்கு காரணம், தவறாக புரிந்து கொண்டு, 16 குழந்தைகளை பெற்று கொள்ள கூடாது என்பதற்காக சொல்வதற்கு தயங்குகின்றனர்.

குழந்தைகள் இன்று அதிகம் பெற்று கொள்வதற்கு நல்ல நிலை உருவாகி இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில், பார்லிமென்டை பிரித்து கொடுக்கிறார்கள். குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது. பார்லிமென்டில் தமிழக தொகுதிகள் குறையும் நிலை வந்து இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து