எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத். கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2014-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014-இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினார். அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர்.
இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அமர்நாத் திடீர் என அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு, மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள திரு. ஸ்ரீராமன் என்பவரை இந்தியத் தொல்லியல் துறை நியமனம் செய்தது. மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவுறும் தறுவாயில், கீழடியில் மேற்கொண்டு அகழாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும், கிடைத்த பொருட்களே மீண்டும் கிடைப்பதாகக் கூறி ஆய்வினைத் திரு. ஸ்ரீராமன் நிறைவு செய்தார்.
அதன் பிறகு, கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணணி தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது 10ஆம் கட்ட அகழாய்வுப் பணி, தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தொல்லியல் ஆய்வுலகில் இந்த ஆய்வறிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அசாமைத் தொடர்ந்து கோவா, பிறகு, மறுபடியும் சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.
இதில் கீழடியில் நிலவிய கலாசாரம். அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள். நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5.765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதன் பின்னர், 2 ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. இயக்குநர் திரு. நாயக், இரண்டு நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, தேவையான திருத்தங்களைச் சேர்த்து, கீழடி அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டார். அறிக்கையில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகள், விரிவான தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், விரிவான அறிவியல் சோதனை முடிவு ஆவணங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது பதிலில் விளக்கினார்.
இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல இந்த ஆய்வில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பா.ஜ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது. அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலகாலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும்.
சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. யுகம் யுகமாக, காலகாலமாக நீடித்து நிலைத்து நிற்கும் தமிழ் மண். சாதாரணமானது அன்று ஒரு பெரும் கலாசார எரிமலை. அதைத் தொட நினைத்தால், வினைவு என்னவாகும் என்பதைச் சிறுகுழந்தையும் அறியும். ஆனால், ஒன்றிய பா.ஐ. மட்டும் அதை உணராமல் எங்கள் உணர்வுடன் விளையாடுகிறது. பின்விளைவுகளை அனுபவித்துத்தான் புரிந்துகொள்வோம் என்று அவர்கள் எண்ணினால். அந்த அறியாமையைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஒன்றிய அரசில் இருக்கும் இவர்கள்தான் இப்படி என்றால். இங்கு இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களான கபட நாடகத் தி.மு.க. போடும் நாடகம் இன்னும் மோசமாக இருக்கிறது. தங்கள் ஆட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளரின் குடும்பத்திற்கு எதிராகவோ ஊழல் புகார்களும் கெட்ட பெயர்களும் எழுகிற போதெல்லாம், தமிழ், தமிழர் என்ற முகமூடியை அணிந்து கம்பு சுற்றும் தி.மு.க.வின் கபட நாடக அரசியலைத் தமிழக மக்களும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். கீழடியின் பெருமையை மறைக்க உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க.வுடன். வெளியே மட்டும் எதிர்ப்பு வேடம் போட்டுக்கொண்டு. குடும்ப நிதியைக் காப்பதற்காக ஒரே போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, மறைமுகமாக ஒத்து ஊதும் தி.மு.க.விற்கும் சேர்த்துச் சொல்லிக்கொள்கிறோம்: தமிழ், தமிழர் நாகரிக வானத்தை எந்தப் புழுதிப் போர்வையையும் போர்த்தி அழுக்காக்கிவிட இயலாது.
அத்தகைய முயற்சி செய்வோருடன் எவ்விதத்திலும் மறைமுகமாகவோ நேரடியாகவோ துணைபோகும் சக்திகளும் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்பதை எங்கள் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Mar 2026சென்னை, ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து
04 Mar 2026சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
04 Mar 2026தங்கம் விலை நேற்று 2-வது நாளாக குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனையானது.
-
தஞ்சையில் விஜய்யை பார்க்க ஆர்வம்: சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
04 Mar 2026தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
-
போர் பதற்றம் எதிரொலி: 3 - வது நாளாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
04 Mar 2026மும்பை, போர் பதற்றம் காரணமாக நேற்று 3-வது நாளாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.
-
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம்: தஞ்சை கூட்டத்தில் விஜய் ஆவேசம்
04 Mar 2026தஞ்சை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
04 Mar 2026தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை கூட்டத்தில் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்
04 Mar 2026தஞ்சை, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை; காவல்துறை விசாரணை தீவிரம்: இதுவரை 7 பேர் கைது
04 Mar 2026திருநெல்வேலி, நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
-
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கொல்லப்படுவார்: இஸ்ரேல் எச்சரிக்கையால் பரபரப்பு
04 Mar 2026ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மிக நீண்ட போருக்கு தயார்: ஈரான்
04 Mar 2026தெஹ்ரான், நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மாணவியின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர்
04 Mar 2026சென்னை, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்க
-
ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மறுப்பு: ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை துண்டித்த டொனால்ட் ட்ரம்ப்
04 Mar 2026நியூயார்க், ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவ மறுத்த ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை தூண்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
நெல்லையில் இன்று அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
04 Mar 2026நெல்லை, நெல்லையில் இன்று நடக்கும் அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
-
மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்
04 Mar 2026மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக, நகை காணாமல் போனதாகப் புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்த
-
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயரை அகற்ற ஒப்புதல்
04 Mar 2026திருச்சி, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்த நிலையில், பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.&nb
-
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கமேனியின் உடல் சொந்த ஊரான மஷ்ஷாத்தில் விரைவில் அடக்கம்
04 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் மதகுரு அயத்துல்லா அலி கமேனி உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
04 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று தி.மு.க.
-
சிவகங்கை தொழிற்பேட்டையில் அமைக்கிறது எம்.ஆர்.எப்.-ன் ரூ.5,300 கோடி மதிப்பிலான புதிய டயர் தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
04 Mar 2026சென்னை, தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
04 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
-
மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை போட்டி
04 Mar 2026சென்னை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.
-
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
04 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


