எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை கள்ளழகர், இராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டிலான 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 கோடி செலவிலான 33 முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காணொலிக் காட்சி...
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.6.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 217 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 திருக்கோவில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, 21 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
வசதிகளை மேம்படுத்துதல்....
இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
திருவள்ளூர், திருச்சி...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் கீழ் 86.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம், மலர்மாலை, பூஜை பொருட்கள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் விற்பனை நிலையம், சுதைவேலைபாடுகளுடன் கூடிய நுழைவு வாயில், அடிப்படை வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம், ஒன்பது நிலை இராஜகோபுரத்தினையும், தேர்வீதியினையும் சுதைவேலைபாடுகளுடன் கூடிய இணைப்புபடி கட்டும் பணிகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 30.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்டப் பணிகளின் கீழ் சமுதாயக் கூடங்கள், ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி, நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள், முடிகாணிக்கை மண்டபம், திருமண மண்டபம், அன்னதானக் கூடம், செயல் அலுவலர் குடியிருப்பு, திருக்குளம் சீரமைத்தல், வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள்; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 14.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைமை அலுவலக வளாகத்தில் கூடுதல் நிர்வாக கட்டிடம் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மதுரை, இராமேசுவரம்...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் 12.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு நிலை இராஜகோபுரம், ஐந்து நிலை இராஜகோபுரங்கள் கட்டுதல் மற்றும் மூன்றாம் பிரகாரத்தில் மேற்கு பகுதியில் உபசன்னதிகள் அமைக்கும் பணிகள்; விழுப்புரம் மாவட்டம், சிங்கவரம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி: இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் 6.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவித்ரபுஷ்கரணி மற்றும் பொய்கை கரைப்பட்டி தெப்பக்குள படிக்கட்டுகள் அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருவண்ணாமலை...
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், அருள்மிகு பயறனீஸ்வரர் திருக்கோயிலில் 4.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; கடலூர் மாவட்டம், மருதூர், திரு அருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லம் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீண்டும் கட்டும் பணி; சென்னை, பாடி, அருள்மிகு திருவல்லீசுவரர் திருக்கோயிலில் 3.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம், அருள்மிகு லெட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் 3.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம், அன்னதானக் கூடம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள்; கிருஷ்ணகிரி மாவட்டம், கண்ணம்பள்ளி, அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராஜகோபுரம் புதுப்பித்தல் மற்றும் முன் மண்டபம் கட்டும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னிமலை, ஸ்ரீவில்லி...
தென்காசி மாவட்டம், பண்பொழி, அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; கடலூர் மாவட்டம், திருநாரையூர், அருள்மிகு சுயம்பிரகார ஈஸ்வரர் திருக்கோயிலில் 2.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு, தேவசம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலுடன் இணைக்கப்பட்ட அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயிலில் 2.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
புதிய அன்னதானக் கூடம்...
திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான பூம்பாறை, அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயிலில் 1.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மூன்று நிலை இராஜகோபுரம் கட்டும் பணி; நாமக்கல் மாவட்டம், மோகனூர், அருள்மிகு காந்தமலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 1.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் மற்றும் விருந்து மண்டபம் கட்டும் பணிகள்; நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 1.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அலுவலர் குடியிருப்பு மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்பு கட்டும் பணி; தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர், அருள்மிகு பால்வண்ணநாதசுவாமி திருக்கோயிலில் 1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் கட்டும் பணி மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணி; திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயிலில் 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடம் கட்டும் பணி; நாகப்பட்டினம் மாவட்டம், பொய்கைநல்லூர், அருள்மிகு சொர்ணபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 1.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரவை காய்கறி சந்தை கட்டடம் கட்டும் பணி என மொத்தம் 217.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை முதல்வர் மு. க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 21.50 கோடி ரூபாய் செலவிலான 33 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


