முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: 47 பேர் காயம்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      உலகம்
Israel

Source: provided

டெல் அவிவ்: இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயமடைந்தனர்.

ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், நேற்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

மருத்துவமனையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், 47 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தாக்குதல் இஸ்ரேல் அரசையும், மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “ஈரானிய சர்வாதிகாரிகள் இன்று (நேற்று) காலை நாட்டின் மையப் பகுதியில் உள்ள சொரோகா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்காக ஈரானிய சர்வாதிகாரிகள் கடும் விலையை கொடுப்பார்கள்” என்று எச்சரித்துள்ளார். சொரோகா மருத்துவமனையை தவிர டெல் அவிவில் உள்ள இரண்டு கட்டிடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் பங்குச் சந்தை கட்டிடமும், சில குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து