முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் ஒப்புதல்...? வெளியான பரபரப்பு தகவல்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது. 

இத்தகைய பதற்றமான சூழலில், ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மூத்த உதவியாளர்களிடம் கூறும் போது, ஈரான் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் எனினும், இறுதி உத்தரவை இன்னும் பிறப்பிக்கவில்லை என்று கூறியதாக அமெரிக்கவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா? என பொறுத்து இருந்து பார்க்க இருப்பதாகவும் அதன்பிறகு முடிவு செய்ய டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக டிரம்ப் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ஈரான் விவகாரத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று யாருக்கும் தெரியாது" எனக்கூறியிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து