முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் முதல் முறையாக டிரம்ப் ஒப்புதல்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள் தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாகக் கூறி இருக்கிறார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதையடுத்து,  இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் 4 நாட்கள் வரை நீடித்த நிலையில், பாகிஸ்தானின்  வேண்டுகோளையடுத்து  மே 10ம் தேதி ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது. இதற்கு  வர்த்தகத்தின் அடிப்படையில் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தையே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி வந்தார். 

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், அவர் இங்கே இருக்கக் காரணம், போருக்குச் செல்லாமல், போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி சிறிது நேரத்திற்கு முன்பு கிளம்பிச்சென்றார். நாங்கள் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள பணியாற்றி வருகிறோம். பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

நான் சில வாரங்களுக்கு முன்பு மோடியுடன் இருந்தேன். உண்மையில் அவர் இங்கே இருந்தார். இப்போது நாங்கள் அவருடன் பேசுகிறோம். இரண்டு புத்திசாலிகள், இரண்டு மிகப்பெரிய புத்திசாலிகள் அந்தப் போரைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது ஒரு அணுசக்திப் போராக இருந்திருக்கலாம். இரண்டு நாடுகளும் அணு சக்திகள். பெரிய அணுசக்தி சக்திகள். அவர்கள் அதை (ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்று) முடிவு செய்தனர்." என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து