முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைலாசா நாடு எங்கே உள்ளது? மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

Source: provided

மதுரை: கைலாஷா நாடு எங்கு உள்ளது, அங்கு  செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் வேண்டுமா உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.

மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடுத்து, நித்யானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதாவது, கைலாஷா நாடு எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது, நித்யானந்தா எங்கு உள்ளார், கைலாஷா நாட்டுக்கு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் வேண்டுமா உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.

இதற்கு நித்யானந்தாவின் தரப்பில் ஆஜரான அவரது சீடர் அரச்சனா, ஆஸ்திரேலியா அருகே யு.எஸ்.கே. என்கிற கைலாசா ஐக்கிய நாடு என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருவதாக கூறினார். மேலும், இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனக் கூறிய அர்ச்சனா, நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, வழக்கை ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து