முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு-குளிக்க தடை

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
Okanagal 2023 08 18

Source: provided

தர்மபுரி : ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபிணி அணைக்கு தற்போது சுமார் 26 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து கடந்த 17-ந்தேதி 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று  முன்தினம் அந்த அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்த நிலையில், தற்போது ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரங்களிலும், ஒகேனக்கல் பிரதான அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து