எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் பிரபுக்கு 33 வயதாகியும் திருமணமாகவில்லை. ஒருவழியாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா பட் அவரை திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கிறார். அதன்படி, பெண் வீட்டில் நிச்சயம் நடைபெற, அன்றைய இரவு மாப்பிள்ளை குடும்பத்தார் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், மேலும் சில நாட்கள் அங்கு தங்குகிறார்கள். இந்நிலையில், மணப்பென் சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு என்ன நடந்தது என்பதுதான் கிளைமாக்ஸ். விக்ரம் பிரபு திருமணம் ஆகாத சோகத்துடன் வலம் வந்தாலும், அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். நாயகியின் தங்கை மீனாட்சி தினேஷ், சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் என அனைவரும் அளவாக அருமையாக நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் சண்முக பிரியன் காதல் கதையை, கலகலப்பான குடும்ப கதையாக இயக்கியிருக்கிறார். மொத்தத்தில், ‘லவ் மேரேஜ்’ குடும்பமாக பார்க்க கூடிய ஒரு ஜாலியான படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


