Idhayam Matrimony

பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      இந்தியா
Election 2023-11-06

Source: provided

புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீகாரில் வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், பீகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. நாடெங்கிலும் பல்வேறு மாநிலத் தோ்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தநிலையில், பீகாரில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் பா.ஜ.க.வுக்கு சாதகமானதொரு நடவடிக்கையாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதனால் இதற்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் கோரப்பட்டுள்ள ஆவணங்களால் பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அதிலும் குறிப்பாக, சிறுபான்மையினர், எஸ்சி எஸ்டி பிரிவினர், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சார்ந்தோர் பலர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு(எஸ்.ஐ.ஆர்) எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அவசரகதியில் முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து