முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      இந்தியா
Nitin-Gadkari 2023 05 17

Source: provided

நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது;- "இஸ்ரேல், ஈரான் மற்றும் ரஷியா, உக்ரைனுக்கும் இடையேயான மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் உலகப் போர் நிகழும் வாய்ப்பு உள்ளது. ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் போரின் பரிமாணங்கள் மாறிவிட்டன.

இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதகுலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது. பெரும்பாலும், பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உலக அளவில் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இவை அனைத்தும் மெதுவாக அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு ஆகியவை மறைத்து வருகின்றன."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து