முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமின் மனு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
Rithanya 2025-07-11

Source: provided

திருப்பூர் : ரிதன்யா தற்கொலை வழக்கில்,  மாமியார் சித்ரா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த  ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கணவர் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கணவர், மாமனாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை 11-ந்தேதிக்கு (நேற்று)  ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து, சித்ராதேவியின் ஜாமின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனு செய்தனர். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அந்த மனுவில் சித்ராதேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பும் விசாரணை நடந்தது. இதனை தொடர்ந்து, சித்ரா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து