முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை..!

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      தமிழகம்
Kodaikanal 2025-07-13

Source: provided

திண்டுக்கல் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வார விடுமுறை தினத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை காலம் மட்டுமின்றி வார விடுமுறை தினங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது தான் காரணம். இந்நிலையில் வார விடுமுறை தினங்களாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

இ-பாஸ் முறையால் சிரமம் என்ற நிலை மாறி, தற்போது எளிதாக இ பாஸ் எடுத்து சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். கடந்த இரு தினங்களாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை, மோயர் பாய்ண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, ரோஸ் கார்டன், பிரையண்ட் பூங்கா பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர்.

நேற்று கொடைக்கானலில்  பகலில் மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான குளிர்ந்த காலநிலை கொடைக்கானலில் நிலவியதை இயற்கை எழிலுடன் சேர்ந்து சுற்றுலாப் பயணிகள் உணர்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து