Idhayam Matrimony

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? அமைச்சர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

அரியலூர், தமிழகத்தில் அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. இந்நிலையில், அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அரசு பஸ் கட்டணம் உயர்வு தொடர்பாக பரவும் கருத்து குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், பஸ் கட்டணம் உயர்வு என்பது வதந்தி. பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்தவித திட்டமும் இல்லை. தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கான சூழ்நிலை ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்று போக்குவரத்து கழகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் இருக்காது' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து