Idhayam Matrimony

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்      அரசியல்
Anwar-Raja-2025-07-21

சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே  என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா,  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  அன்வர் ராஜா கூறியதாவது: பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்போவதாக அ.தி.மு.க. முடிவெடுத்த நாள் முதலே அது வேண்டாம் என்று எனது ஆதங்கத்தைத் தெரிவித்தேன். ஆனால் அது எடுபடவில்லை.  இந்தக் கூட்டணி அமைந்து இத்தனை நாட்கள் ஆகியும்கூட எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா சொல்லவில்லை.

பா.ஜ.க. என்பது தமிழகத்தில் ஒரு நெகடிவ் சக்தி. பா.ஜ.க. அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறது. அதற்காகவே இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அமைந்ததன் மூலம் அ.தி.மு.க. பா.ஜ.க.வின் கையில் சிக்கியுள்ளது. அ.தி.மு.க.வை அழித்துவிடுவதே பா.ஜ.க.வின் நோக்கம். தமிழகத்தில் அ.தி.மு.க.வை அழித்துவிட்டு தி.மு.க.வுக்கு நேரடி போட்டியாக வேண்டும் என்று பா.ஜ.க. திட்டமிடுகிறது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. ஏன் அ.தி.மு.க.விலும் பலருக்கு அதிருப்தியே.  பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே. 

இந்தச் சூழ்நிலையில்தான் கருத்தியல் ரீதியாக ஒற்றுமை கொண்ட தி.மு.க.வில் நான் இணைந்துள்ளேன். நான்  தி.மு.க.வில் இணைய விரும்பியதாக கூறியதும், தளபதி ஸ்டாலின் என்னை அன்போடு வரவேற்று ஏற்றுக் கொண்டார். அவருக்கு நன்றி. ஸ்டாலினுக்கு நிகராக அ.தி.மு.க.வில் மக்கள் அபிமானம் பெற்ற தலைவர் யாரும் இல்லை. இனியும் இருக்கப்போவதில்லை. அதனால் வரும் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து