Idhayam Matrimony

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து ஆலோசனை: மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப்பணிகளைத் தொடர்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதனை சமாளித்துக் கொண்ட முதல்வர், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. திமுகவில் இணையும் நிகழ்வில் பங்கேற்றார்.

இந்நிலையில், தலைசுற்றல் தொடர்ந்து இருந்து வந்ததால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வரின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அதோடு, முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலைியல் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்று அவர் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங்களை கேட்டறிந்த முதல்வர் தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், அவர் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, தற்போதுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து