Idhayam Matrimony

தனிநபர் வருமானத்தில் தமிழகத்திற்கு 2-ம் இடம் : மத்திய அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : தனிநபர் ஆண்டு வருமானத்தில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.1,96,309 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேள்விகளாக கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2024-2025-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014-2015-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் இது ரூ.72,805 ஆக இருந்தது. தனிநபர் வருமானம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மாறுபடும். இது பொருளாதார வளர்ச்சியின் நிலைகள், துறைசார் அமைப்பு, கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன. இதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது. 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆகும்.இதற்கு அடுத்த இடங்களில் அரியானா (ரூ.1,94,285), தெலுங்கானா (ரூ.1,87,912), மராட்டியம் (ரூ.1,76,678), இமாச்சல பிரதேசம் (ரூ.1,63,465) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து